சிங்கப்பூரில் நில நடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

சிங்கப்பூரின் தென் கிழக்கே ஆயிரத்து 102 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அதிகாலை 4.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நில நடுக்கம் - ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
x
சிங்கப்பூரின் தென் கிழக்கே ஆயிரத்து 102 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அதிகாலை 4.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தோனேஷியாவிலும்  6.3 என்ற அளவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. செமராங்கில்  இருந்து வடக்கே 142 கிலோ மீட்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.  இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் நில அதிர்வு அதிகாலை 1.33 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்