கோஷ்டி மோதலின் போது வெடித்த வன்முறை - இளைஞர்கள் 2 பேர் அடித்துக் கொலை
பதிவு : ஜூலை 04, 2020, 08:55 PM
புதுச்சேரியில் கோஷ்டி மோதலின் போது 2 இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரவுடிகள் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண். இவருக்கும் வழுதாவூரை சேர்ந்த முரளி என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன் முரளி உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல், புதுநகர் பகுதிக்கு சென்ற போது, அங்கிருந்த அருண் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதில் பிரச்சினை முற்றவே, இரு தரப்பும் கற்கள் மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கி கொண்டதில், முரளி மற்றும் அவரது நண்பர் சந்துரு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரின் சடலங்களையும் மீட்ட போலீசார், 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த சூழலில் தான் கொலை சம்பவத்திற்கு முன்பாக ரவுடிகள் கையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வரும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ரவுடி அருள்தாஸ் என்பவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் புதுச்சேரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

ரவுடி கொல்லப்பட்ட நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கலந்து கொண்டனர். ஊரடங்கை மீறி இவர்கள் கலந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு நாட்களிலும் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் அதிகம் நடப்பதாக கூறும் அவர்கள், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்... 

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

957 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

432 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

417 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

112 views

பிற செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

98 views

அமெரிக்க துணை அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டி

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.யான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

24 views

"புதுச்சேரிக்கு கொரோனா நிதியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கியது" - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்

புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிதியாக மத்திய அரசு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ

17 views

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

957 views

"கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை வாங்கவும் அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

92 views

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

191 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.