"உ.பியில் இந்தி பாடத்தில் சுமார் 7.95 லட்சம் மாணவர்கள் தோல்வி" - உத்தரபிரதேச மாநில தேர்வு வாரியம் தகவல்

உத்தர பிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தி பாடத்தில் சுமார் 7 லட்சத்து 95 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பியில் இந்தி பாடத்தில் சுமார் 7.95 லட்சம் மாணவர்கள் தோல்வி - உத்தரபிரதேச மாநில தேர்வு வாரியம் தகவல்
x
கடந்த சனிக்கிழமை உத்தரபிரதேச மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியானது.
சுமார் 56 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுதி இருந்த நிலையில், இதில் கிட்டத்தட்ட 7 லட்சத்து 95  ஆயிரம் மாணவர்கள் இந்தி பாடத்தில் தோல்வி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 2 லட்சத்து 39 ஆயிரம் மாணவர்கள் இந்தி தேர்வில் கலந்து கொள்ளாமல் இருந்து இருப்பதாகவும் மாநில தேர்வு வாரியம்  தெரிவித்துள்ளது.இந்தி கற்பது தங்களின் எதிர்காலத்திற்கு தேவையில்லாத ஒன்று என  மாணவர்கள் கருதுவது தான், இந்த தோல்விக்கு காரணம் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்