இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்

போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னையில் கடந்த ஓராண்டில் போதை பொருள் கடத்தியது பயன்படுத்தியதால் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்
x
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜூன் 26ஆம் தேதியான இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

* சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்தும் தரப்பிலும் சிலர் போதை பொருளை பயன்படுத்தி வருகின்றனர். 

* அதிலும் குறிப்பாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அபின், கஞ்சா போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

* சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், தற்போது வரை போதை பொருள் பயன்படுத்தியதாகவும் கடத்தியதாகவும் 25 வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாக போதை பொருள் தடுப்பு  பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த வழக்குகளில் தொடர்புடையதாக  3 வெளிநாட்டினர், 40 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட  2000 கிலோவுக்கு மேல் அளவுள்ள போதைப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

* இது தொடர்பாக 14 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

* இதுமட்டுமில்லாமல் மெத்தாம்பெடாமைன் போதை பொருள் கடத்தியதாக 11 பேர், ஓபியம் உட்பட பிற போதைபொருள் கடத்தியதாக 18 பேர் என மொத்தம் 43 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேரை தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

* இதனிடையே, போதைப்பொருள் ஒழிப்பு குறித்து,  தமிழ்நாடு போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் பலரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகம் பேசி வெளியிட்டுள்ளனர்.

* இன்று சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்  அனுசரிக்கப்படும் நிலையில்,  பொதுமக்கள் போதை பொருள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், போதைப்பொருளை பயன்படுத்தாதவர்கள், அதை பயன்படுத்துவோருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்