திருவிழாவில் தொலைந்து போன "சமூக விலகல்" - கர்நாடக கோயிலில் களை கட்டிய திருவிழா

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் இந்த நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி திருவிழா நடத்திய அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது
x
ஹாவேரி மாவட்டம் கர்ஜகி கிராமத்தில் உள்ள பிரம்ம லிங்கேஸ்வர் ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. முதலில் இந்த திருவிழாவிற்கு அனுமதி மறுத்த காவல் துறை, பின்னர் கடும் கட்டுப்பாடுகளோடு அனுமதி அளித்தது. ஆனால், அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மறந்து முகக்கவசங்கள் கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு ஒன்று கூடிய காட்சி, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்