கேரளாவில் 10, 11 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்

கேரளாவில் இன்று எஸ்.எஸ்.எல்.சி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளன.
x
* இன்று காலை  10 மணிக்கு தொடங்கிய 11 வகுப்பு  தொழிற்கல்வி மேல்நிலைத் தேர்வில், 56 ஆயிரத்து 345 மாணவர்கள் பங்கேற்றனர்.

* பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 450 மாணவர்கள் பங்கேற்றனர். 

* நாளை நடைபெறும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வை,   4 லட்சத்து 704 பேர் எழுத உள்ளனர். 

* எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுத மாநிலத்தில் 2 ஆயிரத்து 945 தேர்வு மையங்களும், லட்சத்தீவு மற்றும் வளைகுடா, மேல்நிலைப்பகுதியில் 2 ஆயிரத்து 45 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

* தேர்வு எழுதும் மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக,
பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

* தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் 25 லட்சம் முக கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

* ஐஆர் தெர்மோமீட்டர்கள் மற்றும் 5 லட்சம் ஜோடி, கையுறைகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

* தேர்வு எழுதி முடித்த  பிறகு, கையுறைகள் ஐ.எம்.ஏ உதவியுடன் சேகரிக்கப்படவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்