சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பதிவு : மே 21, 2020, 08:11 AM
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, நூறு சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதற்காக, அடுத்த 3 நிதி ஆண்டுகளுக்கு, 41 ஆயிரத்து 600 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கும். பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 8 கோடி பேருக்கு இலவசமாக உணவு தானியம் வழங்க, 3 ஆயிரத்து 109 கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

20 ஆயிரம் கோடி மதிப்பில், மீன்வளத்துறைக்கான புதிய திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்,  நிலக்கரி மற்றும்  பழுப்பு நிலக்கரி சுரங்க ஏல புதிய வழிமுறைகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல், மூத்த குடிமக்களுக்கு, முதலீட்டின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கும் திட்ட நீ்ட்டிப்பு உள்ளிட்டவைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிற செய்திகள்

வெட்டுக்கிளிகளின் தாக்கம் தமிழகத்தில் இருக்குமா?

கொரோனாவிற்கு அடுத்தபடியான அச்சுறுத்தல் வெட்டுக்கிளிகள் வடிவில் இந்தியாவிற்கு வந்துள்ளது.

22 views

அமைச்சர் காமராஜ் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புகார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, பொது மக்கள் தங்களுக்கு வழங்கிய 8 ஆயிரத்து 548 மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நேரில் சென்று வழங்கினார்.

26 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

16 views

ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு ஆதித்தனார் கல்லூரி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

திருச்செந்தூரில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நலிவடைந்த ஏழை எளிய நரிக்குறவ மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

7 views

பிரதமர் மோடி-உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு - ஊரடங்கு குறித்து முக்கிய ஆலோசனை

வரும் 31ஆம் தேதியுடன் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துள்ளார்.

90 views

உடுமலை அருகே குளம் தூர்வாரும் பணி - அமைச்சர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலத்தில் குடிமராமத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணியை கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

66 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.