கோவிட் சோதனை கருவி - தனியார் நிறுவனம் கண்டுபிடிப்பு

தனியார் பயோடெக் நிறுவனம் ஒன்று, ரூ.500க்கு கொரோனா பரிசோதனை செய்யும் கருவிகளை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கோவிட் சோதனை கருவி - தனியார் நிறுவனம் கண்டுபிடிப்பு
x
இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்கு குறைந்த செலவில், அதிக அளவில் பரிசோதனை கருவிகள் தேவைப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் செயல்பட்டு ஜிசிசி பயோடெக் இந்தியா என்ற நிறுவனம், தாங்கள் 500 ரூபாய்க்கு கொரோனா பரிசோதனை செய்யும் கோவிட் பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கருவி நன்றாக செயல்படுவதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதுவரை 1 கோடி கருவிகளை தயாரித்துள்ளதாக கூறியுள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்தால், மேலும் தயாரிப்போம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்