ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்கக் கோரி வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 ஜி இணையசேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், உள்துறை செயலாளர் தலைமையில் உயர்நிலை குழுவை உடனடியாக அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்கக் கோரி வழக்கு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 ஜி இணையசேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், உள்துறை செயலாளர் தலைமையில் உயர்நிலை குழுவை உடனடியாக அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமையை மாவட்ட வாரியாக இக்குழு ஆய்வு செய்து, முடக்கி வைக்கப்பட்டுள்ள 4ஜி இணைய சேவை கட்டுப்பாட்டை நீக்குவதா அல்லது தொடர செய்வதா என்பது குறித்து முடிவு செய்ய உள்ளது. 
 உள்துறை செயலாளர் தலைமையிலான இந்த குழுவில், மத்திய தகவல் தொடர்பு துறை செயலாளர், ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள்.நாட்டின் பாதுகாப்பையும்,  மனித உரிமைகளையும் சரிசமமாக உறுதி செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் சிக்கலையும், கொரோனா  தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் தாங்கள் உணர்வதாக நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்