கர்நாடகாவில் மதுக்கடைகள் இயங்க அனுமதி

கர்நாடக மாநிலத்தில் திங்கட்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மதுக்கடைகள் இயங்க அனுமதி
x
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட மார்ச் 22ஆம் தேதி முதல் தற்போது வரை மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன..

இந்நிலையில் வரும் 4ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும் என மாநிலத்தின் கலால் துறை அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்

அனைத்து மாவட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்தந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ரெட் அலர்ட் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் பார் திறக்கப்படாது என்றும் மொத்த விற்பனை மையங்களில் மட்டும் மது விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

குறைந்தது மூன்று அடி சமூக இடைவெளி விட்டு மதுவை வாங்கி செல்ல வேண்டும் என்றும்,  முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்