ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்
x
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், அத்தியாவசியம் மற்றும் அத்தியாவசியமற்ற என்ற வேறுபாடு இல்லாமல் சரக்கு போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளார். மளிகை சாமான்கள், சோப்பு, கிருமி நாசினிகள், ஷாம்பு, தரை மேற்பரப்பு கிளீனர்கள்,  திசு ஆவணங்கள், பற்பசை, வாய் வழி பராமரிப்பு பொருட்கள், சானிட்டரி பேட்கள், டயாப்பர்கள், பேட்டரி செல்கள், சார்ஜர்கள் போன்றவை தங்கு தடையின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும், பால் மற்றும் அது சார்ந்த பணிகள், செய்தித்தாள் விநியோகமும் அனுமதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்