கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர், செவிலியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு - நிர்மலா சீதாராமன்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர் - செவிலியர்களுக்கு, 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
x
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர் - செவிலியர்களுக்கு,  50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்யப்படும் என தெரிவித்தார். மக்கள் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறினார். அந்தந்த பகுதிகளில் பயன்படுத்தும், வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் தவணையாக ஏப்ரல் முதல் வாரம் வங்கிக் கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் எனவும், நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் 5 கோடி பேருக்கு, 2 ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  ஊதியம், 182 ரூபாயிலிருந்து 202 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 8 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 வழங்கப்படும் என்றும்,மகளிர் குழுக்களுக்கு தீன் தயாள் திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் 3 கோடி பேருக்கு, தலா ஆயிரம் ரூபாய் இரு தவணையாக 3 மாதங்களுக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்