21 நாட்களுக்கு ஊரடங்கு - எதற்கெல்லாம் அனுமதி உண்டு?

நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், அதில் எந்தெந்த துறைகளுக்கு எல்லாம் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
21 நாட்களுக்கு ஊரடங்கு - எதற்கெல்லாம் அனுமதி உண்டு?
x
உணவுப்பொருட்கள், பால், மளிகை, காய்கறி மற்றும் பழங்கள், முட்டை, இறைச்சி, மீன், ஆகியவற்றின் விற்பனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனப்போக்குவரத்து மற்றும் வினியோக நிறுவனங்கள் செயல்பட அனுமதி உண்டு. அனைத்து வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு, நிறுவனங்கள், பங்குச்சந்தை, சந்தை தரகு நிறுவனங்கள் ஆகியவை இயங்க தடை இல்லை. உணவு பார்சல் அளிக்கும் உணவகங்களுக்கு அனுமதி உண்டு. வேளாண் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை இல்லை. உணவு, மருந்து, மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் சார்ந்த ஆன்லைன் வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  அரிசி, பருப்பு ஆலைகள், சர்க்கரை ஆலை, பால் நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள  தொழிற்சாலைகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும். பெட்ரோல் நிலையங்கள், கேஸ், எண்ணெய் நிறுவனங்கள், அது சார்ந்த கிடங்கு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி உண்டு. வாட்டர் டேங்கர் உள்ளிட்ட குடிநீர் சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு. 

Next Story

மேலும் செய்திகள்