பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய புதிய அறிவிப்புகள்

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை சரி செய்ய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பொருளாதார பாதிப்புகளை சரிசெய்ய புதிய அறிவிப்புகள்
x
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன்,  வருமான வரி சார்ந்த அத்தனைப் பணிகளுக்கும் ஜூன் 30 ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்படும் என் அறிவித்தார். அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வங்கிக் கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும்,  அடுத்த 3 மாதங்களுக்கு வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருப்பது கட்டாயமில்லை எனவும் எந்த வங்கி டெபிட் கார்டாக இருந்தாலும், அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுக்கலாம் எனவும், அடுத்த 3 மாதங்களுக்கு கட்டணங்களில் இருந்து விலக்கு அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, வருமான வரி தாக்கல் செய்வதற்கு  ஜூன் 30 ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத ஜிஎஸ்டி ஜூன் 30 வரை தாக்கல் செய்யலாம் என்றும், 5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு, வட்டி, அபராதம் மற்றும் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்