தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள் - 15 நிமிடத்தில் ரூ.7 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள தொடர்சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள் - 15 நிமிடத்தில் ரூ.7 லட்சம் கோடி இழந்த முதலீட்டாளர்கள்
x
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள தொடர்சரிவு  காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இன்று, பங்கு வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 27 ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. நிப்டி 8 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே சரிந்தது. இதனால்,15 நிமிடங்களில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தினசரி வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் அனைத்து பங்குச் சந்தைகளும் கடும் சரிவை கண்டுள்ளதால், இந்திய பங்குச் சந்தைகளில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், 75 ரூபாய் வரை சரிந்துள்ளது. ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் 4 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்