"கொரோனாவை தடுக்க போதுமான வசதிகள் இல்லை" - உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டு

டெல்லியில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த, பொதுமக்கள் கைகளை கழுவ டிஸ்பென்சர்களை ஏற்படுத்துமாறு ஆட்சியர்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க போதுமான வசதிகள் இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டு
x
அரசின் உத்தரவுபடி, டெல்லியில் உள்ள  மூன்று மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கைகளைக் கழுவ திரவ சோப்பு மற்றும் தண்ணீர் ஆகிய வசதிகளை கொண்ட சுமார் 300 டிஸ்பென்சர்களை ஏற்படுத்த மாநகராட்சிகளின் ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை விடுமுறைக்கு பிறகு உச்சநீதிமன்ற திறக்கப்பட்டுள்ளதை அடுத்து,  நீதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்க்ள், செய்தியாளர்கள் ஆகியோரின் உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. 
உச்ச நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் உணவகங்களை மூடப்பட்டுள்ளன. கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், உயர்நீதிமன்றங்கள் பெரிய அளவிலான அறைகளை கொண்டவை என்பதை சுட்டி காட்டியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் ஷா, 
கொரோனா தொற்றை தடுக்க, உச்சநீதிமன்றத்தில் போதுமான வசதிகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்