மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு: ரூ.62 ஆயிரம் கோடி அளவுக்கு குறைவு என தகவல்

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு திட்டமிட்ட அளவை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு துறைக்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவது பாதிக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு நிதி ஒதுக்கீடு: ரூ.62 ஆயிரம் கோடி அளவுக்கு குறைவு என தகவல்
x
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடியாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டது. தற்போது ஒதுக்கியுள்ள தொகை, சுமார் 61 ஆயிரத்து 968 கோடி ரூபாய் குறைவு  என்பதால்,  பாதுகாப்பு துறைக்கு நவீன ஆயுதங்கள் போர் விமானங்கள், கப்பல் மற்றும் பீரங்கி வாங்குவது பாதிக்கப்படும் என நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரித்துள்ளது. ராணுவ துறையை மேம்படுத்தவும் நவீன ஆயுதங்கள் வாங்கவும் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள அண்டை நாடுகளுடன் போட்டியிட ஏதுவாக தேவையான நிதி ஒதுக்கீடு அவசியம் என கருதுவதாக பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்