7 மாத வீட்டுக்காவலுக்கு பின்னர் விடுதலையான பரூக் அப்துல்லா

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டுக் காவலில் 7 மாதங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அ​ப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார்.
x
ஜம்மு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டுக் காவலில் 7 மாதங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அ​ப்துல்லா இன்று விடுவிக்கப்பட்டு உள்ளார். வீட்டுக்காவலில் இருந்து வெளியே வந்த பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார். இன்றைய பொழுதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்றும், தற்போது தாம் டெல்லி செல்லலாம், நாடாளுமன்ற நடவடிக்கையில் பங்கேற்கலாம் மற்றும் மக்களுக்காக பேச முடியும் என்றும் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்