வீட்டு வேலைக்காக வெளிநாடு போகாதீர்கள்.." - பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள்

வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்ற தங்களுக்கு பாலியல் தொல்லை, உடலில் சூடு என பல சித்ரவதைகள் கொடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்
வீட்டு வேலைக்காக வெளிநாடு போகாதீர்கள்.. - பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள்
x
வெளிநாட்டு வேலை... 
கைநிறைய சம்பளம்... 
இதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்வோர் ஏராளம். தங்கள் வீட்டு பொருளாதார சூழல் உள்ளிட்ட காரணங்களால் உறவுகளை விட்டு விட்டு வெளிநாட்டு வேலை என்ற மாயையில் சிக்கி வெளியேற முடியாமல் தத்தளிக்கும் பெண்களையும்  கணிசமாக பார்க்க முடிகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் குவைத்துக்கு சென்ற பெண்களுக்கு நடந்திருக்கிறது. 

திருவண்ணாமலை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 4 பெண்கள் குவைத்தில் சிக்கி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு மீண்டு வந்திருக்கின்றனர். சென்னையில் அவர்கள் கண்ணீர் மல்க பேசியதை கேட்கவே நமக்கெல்லாம் பகீர் என்கிறது. அதிகாலை தொடங்கும் வேலையானது ஒரு பகலை தாண்டி இரவு நேரம் வரை நீள்வதாக கூறும் அவர்கள், உழைப்பை தாண்டி தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் அதிகம் என கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர். 

பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொள்வதால் தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என கூறும் அவர்கள், வெளிநாட்டு வேலை ஆசை காட்டும் ஏஜெண்டுகளை நம்பாதீர்கள் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர். தங்களின் வறுமையையும் குடும்ப சூழலையும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இதுபோன்ற அநீதிகளை இழைப்பதாகவும் பெண்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவிக்கின்றனர். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 4 பேர் மீண்டு வந்த நிலையில் குவைத் உள்ளிட்ட நாடுகளில் தங்களை போல சிக்கித் தவிப்போரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்