பேராசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி - கல்லூரி மாடியிலிருந்து கீழே குதித்தார்

புதுச்சேரி அருகே பேராசிரியர் திட்டியதால் மாணவி ஒருவர் தனியார் கல்லூரியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி - கல்லூரி மாடியிலிருந்து கீழே குதித்தார்
x
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ப்ரித்திகா, விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் இன்று கல்லூரிக்கு சென்ற ப்ரித்திகா, இடைவேளை நேரத்தில்  தன்னுடன் பயிலும் சக ஆண் நண்பர்களுடன் திண்பட்டங்களை பகிர்ந்து கொண்டு விளையாடியுள்ளார். இதனை பார்த்த பேராசிரியர் பிராதபன் மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ப்ரித்திகா கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே மாணவியின் தற்கொலை முயற்சிக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் திடீரென சாலை மறியல் செய்தனர்.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்