YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ. - வாடிக்கையாளர் பணம் எடுக்க கட்டுப்பாடு

வாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான 'Yes Bank' கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
YES BANK நிர்வாகத்தை கையில் எடுத்தது ஆர்.பி.ஐ. - வாடிக்கையாளர் பணம் எடுக்க கட்டுப்பாடு
x
வாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான 'Yes Bank' கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ் பேங்கினை நிர்வகிக்க முன்னாள் பாரத ஸ்டேட் வங்கி தலைமை நிதி அலுவலர் பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள், தற்போது அதிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே  எடுக்க அனுமதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்