டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரிக்கை - மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி, பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பு

டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரி மக்களவையில் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரிக்கை - மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி, பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பு
x
டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரி, மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், வலியுறுத்தினர். மக்களவை காலை துவங்கியதும் கேள்வி நேரம் துவங்குவதாக, சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, டெல்லி வன்முறை குறித்து அவையில் ஒரு நாளாவது, விவாதம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து, அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. Next Story

மேலும் செய்திகள்