கர்நாடகா: காட்டுயானைகள் தாக்கி இருவர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம், பங்காருப்பேட்டை பகுதியில், காட்டுயானைகள் தாக்கி வனத்துறையினர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
கர்நாடகா: காட்டுயானைகள் தாக்கி இருவர் உயிரிழப்பு
x
கர்நாடகா மாநிலம், பங்காருப்பேட்டை பகுதியில், காட்டுயானைகள் தாக்கி வனத்துறையினர் உட்பட இருவர் உயிரிழந்தனர். அப்பகுதியில், கடந்த 10 நாட்களாக அச்சுறுத்தி வந்த யானைகள் கூட்டத்தை , கர்நாடகா வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசுகளை வெடித்து  விரட்டி சென்றனர். அப்போது, தனியாக பிரிந்த ஒற்றை காட்டுயானை ஒன்று விவசாயியை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். அதேபோல் மற்றொரு ஒற்றை யானை விரட்டியதில், வன கண்காணிப்பாளரான குட்ட முனியப்பாவும் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்