டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் ஆய்வு

டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார்.
டெல்லி வன்முறை : பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு - பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணைநிலை ஆளுநர் ஆய்வு
x
டெல்லி வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வன்முறை பாதித்த  பகுதிகளை டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் நேரில் சந்தித்து கள நிலவரத்தை கேட்டறிந்தார். இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவினர் சந்தித்து நலம் விசாரித்தனர். இதனிடையே, டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக,  இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்