அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்த டாடா சன்ஸ் தலைவர் - நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பாக ஆலோசனை

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்த டாடா சன்ஸ் தலைவர் - நிலுவைத் தொகையை செலுத்துவது தொடர்பாக ஆலோசனை
x
மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்பாக, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை, டாடா சன்ஸ் நிறுவன தலைவர்  சந்திரசேகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அலைக்கற்றை உரிம கட்டண உள்பட சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான கட்டணங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு நிலுவை வைத்துள்ளன. டாடா சன்ஸ் நிறுவனம் சுமார் 14 ஆயிரம் கோடி செலுத்த வேண்டிய நிலையில்,  2 ஆயிரத்து 197 கோடி மட்டுமே நிலுவை உள்ளதாக டாடா சன்ஸ் கூறியுள்ளது. இந்த நிலையில் சந்திரசேகரன், அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்