காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : காதலி தற்கொலை, துக்கத்திற்கு சென்ற காதலன் வெட்டிக்கொலை - சகோதரன் உள்ளிட்ட 7 பேர் கைது

புதுச்சேரியில் காதலித்த பெண்ணின் இறப்புக்கு சென்ற காதலனை வெட்டி கொலை செய்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : காதலி தற்கொலை, துக்கத்திற்கு சென்ற காதலன் வெட்டிக்கொலை - சகோதரன் உள்ளிட்ட 7 பேர் கைது
x
பெரியகோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சார்ந்தவர் ராகவன். ஹைதராபாத்தில்  டைல்ஸ் ஓட்டும் பணி செய்து வந்துள்ளார். இவரும் மருத்துவமனையில் பணியாற்றிய சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த அருணா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், அருணாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துஅதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த  அருணா கடந்த 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த காதலன் ராகவன் கோட்டக்குப்பம் சென்றுள்ளார். 
இந்நிலையில் ராகவனை கொலை செய்ய திட்டமிட்ட காதலியின் உறவினர்கள், ராகவனுடன் பணியாற்றும் நண்பனின் மூலம் கோட்டகுப்பத்திற்கு வரவழைத்து கடத்தி சென்று கொலை செய்து உடலை தீ வைத்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக பெண்ணிண் சகோதரன், தாய் மாமன் உள்ளிட்ட 7 பேரை  கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவனை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்