பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

டெல்லி சிறப்பு போலீஸ் நடத்திய என்கவுன்டரில் இரண்டு குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
x
டெல்லி கரவால்நகர் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 5 மணிக்கு புல்பிரகலாத்பூர் பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுன்டரின் போது, காயம் அடைந்த டெல்லி சிறப்பு போலீஸ் இருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்காப்புக்காக சுட்டதில், குற்றவாளிகள் இருவர் இறந்துவிட்டதாக டெல்லி சிறப்பு போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்