ஏழுமலையான் கோயிலில் மகிந்த ராஜபக்ச சாமி தரிசனம்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் கோயிலில் மகிந்த ராஜபக்ச சாமி தரிசனம்
x
இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மோடியை சந்தித்த பின், பல்வேறு கோயில்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக நேற்று மாலை திருப்பதி வந்த அவர், இன்று காலை ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். தேவஸ்தான நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். ஏழுமலையானை தரிசனம் செய்த ராஜபக்சே, தங்க நாணயங்களை காணிக்கையாக வழங்கினார். பின்னர், தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கிய அவர், அதிகாரிகள், வேதபண்டிதர்கள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். ரேணிகுண்டா விமான நிலையம் மூலம் இன்று இலங்கை செல்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்