கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மாணவி - உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மருத்துவ மாணவியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மாணவி - உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
x
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான கேரள மருத்துவ மாணவியின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உஹான் நகரிலிருந்து கேரளா திரும்பிய அந்த மாணவி 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபர் ஆவார். திருச்சூரை சேர்ந்த அந்த மாணவி தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மறைந்துள்ளதாக  கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆலப்புழாவில் உள்ள ஆய்வக அறிக்கையில் இது தெரிய வந்துள்ளதாகவும், ஆனாலும் புனேவிலிருந்து மருத்துவ ஆய்வறிக்கை வந்த பின்புதான் அது உறுதி படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர். கேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறி காணப்படும் 34பேர்  பல்வேறு மருத்துவமனைகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Next Story

மேலும் செய்திகள்