"கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 இந்திய மாணவர்கள் வுஹானில் உள்ளனர்" - மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் 80 பேர் இன்னும் சீனாவின் வுஹானில் நகரில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால்  பாதிக்கப்பட்ட 80 இந்திய மாணவர்கள் வுஹானில் உள்ளனர் - மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
x
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் 80 பேர் இன்னும் சீனாவின் வுஹானில் நகரில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த அமைச்சர்,  80 மாணவர்களில் 10 பேர் இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்ததாக கூறினார். ஆனால், காய்ச்சல் இருந்ததால் அவர்கள் ஏர் இந்தியா விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என கூறியுள்ளார். சீனாவில் உள்ள இந்தியர்கள் மட்டுமல்ல, நமது அண்டை நாடான மாலத்தீவைச் சேர்ந்தவர்களையும் இந்தியா அழைத்து வர மத்திய அரசு உதவியதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்