இன்று டெல்லி சட்டமன்றத்தேர்தல் : 70 தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்

டெல்லி சட்டமன்றத்திற்கு, இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 70 தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
இன்று டெல்லி சட்டமன்றத்தேர்தல் : 70 தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்
x
அங்கு, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இடையே, மும்முனை போட்டி நிலவி வருகிறது. மூன்று கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில்,  காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.  மாலை 6 மணிவரை  வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு, மொத்தம், 672 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்கள் வாக்களிக்க 13 ஆயிரத்து 750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்