"குறுகிய கால, நீண்டகால வளர்ச்சி சாத்தியமாகும்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

உள் கட்டமைப்பு துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளால், நீண்ட மற்றும் குறுகிய கால வளர்ச்சி சாத்தியமாகும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
குறுகிய கால, நீண்டகால வளர்ச்சி சாத்தியமாகும் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
x
உள் கட்டமைப்பு துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளால், நீண்ட மற்றும் குறுகிய கால வளர்ச்சி சாத்தியமாகும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பட்ஜெட் அறிவிப்புக்கு பின்னர், இதுகுறித்த விளக்க கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், பட்ஜெட் அறிவிப்புகளை செயல்படுத்துவது குறித்து தொழில்துறையினர், வர்த்தகர்கள் மற்றும் ஆடிட்டர்களுடன் கலந்து பேச உள்ளதாக குறிப்பிட்டார். சென்னை, கொல்கத்தா மற்றும் பிற நகரங்களிலும் பட்ஜெட் விளக்க கூட்டம் நடக்க உள்ளதாகவும், உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வளர்ச்சி இலக்கு சாத்தியம் என்றும் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்