டெல்லி துணை முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி கைது : ரூ.2 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற போது சிக்கினார்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின், சிறப்பு பணி அதிகாரி கோபால கிருஷ்ண மாதவ் லஞ்சம் பெற முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி துணை முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி கைது : ரூ.2 லட்சம் லஞ்சமாக பெற முயன்ற போது சிக்கினார்
x
மணிஷ் சிசோடியாவின், சிறப்பு பணி அதிகாரியாக பணியாற்றி வரும் கோபால் கிருஷ்ண மாதவ், ஜிஎஸ்டி விவகாரத்தில் 2 லட்ச ரூபாயை லஞ்சம் பெற முயன்றுள்ளார்.  2 லட்ச ரூபாயை அவர் லஞ்சமாக பெற முயன்ற போது சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு கோபால கிருஷ்ணனை அழைத்து சென்றனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் , துணை முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்