தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் : பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் போலீசார்.

டெல்லி தேர்தல் பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்ப உள்ளனர்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் : பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் போலீசார்.
x
டெல்லியில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 40 ஆயிரம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோல, 190 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படையினரும், 19 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும்  பாதுகாப்பு பணியில் பங்கேற்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 545 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 689 வாக்குப்பதிவு மையங்களுக்கும் 21 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சட்ட விரோத மதுபான கடத்தலை தடுக்க வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், சமூக வலைதளங்களில்  வெறுப்பூட்டும் பதிவுகள் பகிர்வு குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி,  எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்