11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கம்: துப்பாக்கியில் குறி பார்த்த பிரதமர் மோடி

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்11வது ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
11வது ராணுவ தளவாட கண்காட்சி தொடக்கம்: துப்பாக்கியில் குறி பார்த்த பிரதமர் மோடி
x
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில்11வது ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வியக்க வைக்கும் சாகசங்கள் நிறைந்த நிகழ்ச்சி பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.

ஐந்து நாட்கள் நடைபெற உள்ள மெகா ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில், 35 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேக் இன் இந்தியா திட்டத்தின் படி இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அவர், இந்த துறையில் நூறு சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கிருந்த துப்பாக்கியில் குறி வைத்தும், நவீன உபகரணங்களை பயன்படுத்தியும் பார்த்தார்.

இந்தியாவில் தயாரிக்கபட்ட ஹனுமான் ரோபாட்டுடன் கைகுலுக்கிய பிரதமர் மோடி, ராணுவத்தில் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் நைட் விஷன் எனும் அதிநவீன கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி பார்த்தார். பின்னர் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் வானில் வட்டமடித்து சாசகங்கள் நிகழ்த்தின. அதனை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். 

சி17 மற்றும் சு30 ரக போர் விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தின. ராணுவ டாங்கிகளின் செயல்திறன் குறித்து, விளக்கும் வகையில் குண்டுகள் வெடித்து காட்சிப்படுத்தப்பட்டது. ராணுவ வீரர்கள் களத்தில் ஆற்றும் வீர சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. போர்களத்தில் நடைபெறும் காட்சிகளை நேரில் ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.




Next Story

மேலும் செய்திகள்