காங்கிரஸ் கட்சி பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை - முன்விரோதம் காரணமாக கொலையா என போலீசார் விசாரணை

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்ப​ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சி பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை - முன்விரோதம் காரணமாக கொலையா என போலீசார் விசாரணை
x
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சாம்பசிவம். தனது தங்கை திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க காரில் கிருமாம்பாக்கம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, அவர் சென்ற கார் அரசு பள்ளி அருகே வந்த போது, மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை கார் மீது வீசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து  காரை விட்டு இறங்கி ஓடிய சாம்பசிவத்தை விரட்டிச் சென்ற மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருமாம்பாக்கம் போலீசார், சாம்பசிவம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கொலையாளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரி கொல்லப்பட்ட சாம்பவசிவத்தின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்