நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், முகேஷின் கருணை மனு தொடர்பாக முடிவெடுக்க தேவையான அனைத்து ஆவணங்களையும் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற வாதத்தில் தகுதியில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.  சிறையில் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுவதை, கருணை மனுவுக்கான போதிய காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.முகேஷின் கருணை மனுவை, முழுமையாக ஆராயாமல், குடியரசுத் தலைவர் அவசர அவசரமாக நிராகரித்துவிட்டதாக கூறப்படுவதையும் காரணமாக கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், கருணை மனு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகளில் தலையிட உச்ச நீதிமன்றத்துக்கு குறைந்த அளவே அதிகாரம் உள்ளதாக தெரிவித்ததுடன், முகேஷின் இந்த  மனுவை தள்ளுபடி செய்வதாக தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்