கோத்ராவில் இஸ்லாமியர்கள் 33 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு - 17 பேருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலம் கோத்ரா வன்முறை வழக்கில், குற்றவாளிகள், 17 பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோத்ராவில் இஸ்லாமியர்கள் 33 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கு - 17 பேருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
x
இந்த வழக்கில்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் மேல்முறையீடு செய்தனர். இம்மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ஆயுள் தண்டனை கைதிகள் 17 பேரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் 17 பேருக்கும் ஜாமீன் கொடுத்துள்ளது. மேலும், ஜாமீன் பெற்ற 17 பேரும் மத்திய பிரதேசத்தின் இந்தூர் மற்று ஜபல்பூரில் தங்கியிருக்க நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள 17 பேரும் ஆன்மிகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்