ஆந்திரா - ஒடிசா எல்லை மலைப்பகுதியில் தாக்குதல் : வீடுகள், இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிப்பு

ஆந்திரா - ஒரிசா எல்லை மலைப்பகுதியில், மலைவாழ் மக்களுக்கும் - மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த மோதலில், வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
ஆந்திரா - ஒடிசா எல்லை மலைப்பகுதியில் தாக்குதல் : வீடுகள், இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிப்பு
x
ஆந்திரா மாநிலம் சித்திர குண்டா, அந்தரபள்ளி மலைகிராமங்களில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை தடுக்கும் வகையில் மாவோயிஸ்டுகள் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மாவோயிஸ்டுகளுக்கும் மலைவாழ்  மக்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு நாட்களுக்கு முன், ஒரு மாவோயிஸ்ட் அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாவோயிஸ்டுகள், கிராமத்திற்குள் புகுந்து, பத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கொளுத்திய தோடு, ஐந்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும் நேற்று இரவு தீ வைத்தனர்.இதை தொடர்ந்து அங்கு போலீசார் முகாமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்