திருவனந்தபுரம் : குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு - 600 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரளாவில் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திருவனந்தபுரம் : குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு - 600 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம்
x
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரளாவில் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு, மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பில், இந்த போராட்டம் நடைபெற்றது.  இதில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்  உள்ளிட்ட  லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
களியக்காவிளை முதல் காசர்கோடு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர் என, அனைத்து தரப்பினரும் கைகோரித்து நின்று, எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு, மணக்கோலத்தில் வந்த புதுமணத்தம்பதிகளும், கலந்து கொண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்