குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டம் : பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டம் : பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆசாத் மார்கெட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு, குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு


டெல்லி நிஜாமுதீன் பகுதியிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திரபடி முழக்கமிட்டனர். குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய இரவில் இந்த பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Next Story

மேலும் செய்திகள்