ஸ்ரீநகரில் உள்ள லலித் கிராண்ட் பேலஸ் ஹோட்டல் - ஒமர் அப்துல்லாவின் ஆடம்பர பங்களா என பரவிய வீடியோ

சமூக வலைதளங்களில் பரவும் சில தகவல்களும் காட்சிகளும் தினமும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அவற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது...?
ஸ்ரீநகரில் உள்ள லலித் கிராண்ட் பேலஸ் ஹோட்டல் - ஒமர் அப்துல்லாவின் ஆடம்பர பங்களா என பரவிய வீடியோ
x
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த படத்தில் இருப்பவர் யாரென்று தெரிகிறதா?.... 
அதை தெரிந்துகொள்வதற்கு முன், அதே நபர் பற்றி ஏற்கனவே பரவிய ஒரு தகவலை பார்க்கலாம்... 
இந்த பங்களாக்களைப் பாருங்கள்….

பொது பணத்தில் அரசாங்கத்தால் பராமரிக்கப்படும் இந்த வீடுகள் ஸ்ரீநகர், ஜம்மு & காஷ்மீரில் இருப்பவை...
 
குலாம் நபி ஆசாத்
உமர் அப்துல்லா
ஃபாரூக் அப்துல்லா
மெஹபூபா முப்தி 

ஆகியோர் 370 மற்றும் 35 ஏ சட்டங்கள் அகற்றப்பட்டதை ஏன் எதிர்க்கிறார்கள்? என்பதை நீங்கள் விரைவில் அறிந்து கொள்வீர்கள்..... 

370 வது பிரிவின் முக்கிய விதிகளை மத்திய அரசு நீக்கியபோது, இப்படி ஒரு பேஸ்புக் பதிவு வெளியாகி,  வேகமாக பரவியது

ஆடம்பரமான குடியிருப்பு போல தோற்றமளிக்கும் இந்த சொத்துக்கள் தேசிய மாநாட்டுத் தலைவர்கள் ஃபாரூக் அப்துல்லா மற்றும் ஒமர் அப்துல்லா, பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு சொந்தமானது என்பது போல வெளியிடப்பட்ட இந்த பேஸ்புக் பதிவு பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. 

2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காஷ்மீர் லைப் என்ற இணையதளத்தில், ஜனநாயகத்தின் மன்னர்கள் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது. காஷ்மீரின் முதலமைச்சர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக  குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இணையதளத்தில் வெளியான புகைப்படங்களே இவை.... 

ஆடம்பர வாழ்க்கைக்காகவே உருவாக்கப்பட்ட அந்த பங்களாக்களை பார்ப்பவர்கள் பிரமிப்பில் ஆழ்ந்து போவார்கள். அதனால்  பலரும் சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பினர். 

அந்த புகைப்படங்கள் உண்மையானவையா... அந்த பங்களாக்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு சொந்தமானவையா....

இல்லவே இல்லை... சமூக வலைதளங்களில் பரவிய ஆடம்பர பங்களா புகைப்படங்கள் போலியானவை.... 

காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லலித் கிராண்ட் பேலஸ் என்ற சொகுசு ஹோட்டலின் புகைப்படங்களே அவை... 

ஒமர் அப் துல்லாவின் வீடு, ஸ்ரீநகரில் ஜி 1 குப்கர் சாலை  என்ற முகவரியில் இருப்பதாக அவரே தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். 

ஒமர் அப்துல்லாவின் ஆடம்பர பங்களா என பரவிய புகைப்படங்கள் உண்மையானவை அல்ல... அது ஹோட்டலின் புகைப்படங்கள்...

ஒமர் அப்துல்லா பற்றி தற்போதும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 6 மாதம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒமர் அப்துல்லா தாடியுடன் இருக்கும் அந்த புகைப்படத்தை ஒரு செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் வெளியிட்டுள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இந்த நிலை எப்போது மாறும் என கேள்வி எழுப்பியுள்ளார். உமர் அப்துல்லாவின் இந்த புகைப்படம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்