"ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை, ஜூன் 1 முதல் அமல்" - மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவிப்பு
ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை முறையை ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, ஒரே தேசம், ஒரே ரேஷன் அட்டை கொண்டு வரப்படும் என்றும் இதன் மூலம் வேறு மாநிலத்துக்கு பிழைப்பு தேடி சென்றோர் பயன்பெறலாம் என்றும் கூறியது. இந்நிலையில், ஒரே தேசம், ஒரே ரேஷன் அட்டை, வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு பயன்தரக் கூடியது என்று ஒரு தரப்பும், பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என மற்றொரு தரப்பும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story

