ஆந்திராவுக்கு ஒரே தலைநகர் கோரிக்கை - இருமுடியுடன் சென்று வழிபட்ட பெண் பக்தர்கள்

ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை வலியுறுத்தி அமராவதியை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடியுடன் சென்று கனகதுர்க்காவை வழிபட்டனர்.
ஆந்திராவுக்கு ஒரே தலைநகர் கோரிக்கை - இருமுடியுடன் சென்று வழிபட்ட பெண் பக்தர்கள்
x
ஆந்திராவின் தற்போதைய தலைநகரான அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் , கர்னூலை  உயர்நீதிமன்ற தலைநகராகவும் ஏற்படுத்தி மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சி அடைய செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவருவதாக மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆனால் அமராவதியில் தலைநகர் ஏற்படுத்த நிலம் கொடுத்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 34 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமராவதி ஒரே தலைநகரத்தை வலியுறுத்தி நிலம் கொடுத்த குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் ஊர்களிலிருந்து இருமுடி கட்டி நடைபயணமாக புறப்பட்டு, விஜயவாடாவுக்கு சென்று கனகதுர்க்கம்மாவை  வழிபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்