உச்ச - உயர்நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் விவகாரம்: "வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும்" - தலைமை நீதிபதி போப்டே

வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச - உயர்நீதிமன்றங்களில் வழக்கு நடத்தும் விவகாரம்: வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்ச தகுதியை நிர்ணயிக்க வேண்டும் - தலைமை நீதிபதி போப்டே
x
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்த குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்  பெற்றிருக்க வேண்டும் என தலைமை நீதிபதி மீண்டும் வலியுறுத்தி உள்ளார். வழக்குகளை அவசரமாக பட்டிலிடவும், விசாரிக்க வேண்டியும் வழக்குரைஞர்கள் முறையிடுவது தொடர்பாக உரிய வழிமுறை கொண்டு வரவேண்டும் என தலைமை நீதிபதி முன்பு, உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க தலைவரும், மூத்த வழக்கறிருருமான துஷ்யந்த் தவே முறையிட்டார். அப்போது, பல வழக்க​றிஞர்கள் வழக்கு தொடர்பாக முறையிடும் விதம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றும், மோசமாகவும் உள்ளதாகவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியின் இந்த கருத்தை துஷ்யந்த் தவேவும் ஏற்றுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்