"வட்டியுடன் ரூ. 1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும்" - தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு
பதிவு : ஜனவரி 17, 2020, 01:09 AM
மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை, ஒரு வாரத்திற்குள் வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், பயன்படுத்தும், அலைக்கற்றை அளவிற்கு ஏற்ப உரிமம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த அலைக்கற்றையை பயன்படுத்தி, மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயும், இந்த கணக்கில் சேர்க்கப்பட்டு, அரசால் வசூலிக்கப்படும் என்பதால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மொத்தமாக ஒரு லட்சம்  கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது. இதை எதிர்த்து, தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தொகையினை செலுத்த வேண்டும் என்பதுடன், இது தொடர்பாக புதிய வழக்குகள் தாக்கல் செய்ய கூடாது என கூறி தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததால்,15 தொலைதொடர்பு நிறுவனங்களும், வட்டியுடன், சேர்த்து 1 புள்ளி 47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டி உள்ளது. இதில் தற்பொழுது செயல்பாட்டில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு செலுத்த வேண்டி உள்ளது.

பிற செய்திகள்

பழச்சாற்றில் மதுவகைகளை கலந்து விற்பனை - 2 பேரை கைது செய்தது காவல்துறை

சென்னையில் மது கலந்த பழச்சாறு தயாரித்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

6 views

சென்னையில் ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

14 views

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு1,500-ஐ கடந்தது

தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

கேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமையன்று, 225 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

48 views

என்.எல்.சி.யில் விபத்து - பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

நெய்வேலி அனல் மின் நிலையத்தில், கொதிகலன் வெடித்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

17 views

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணை

ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

178 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.