தேசிய கட்சிகளின் தேர்தல் செலவினங்கள் குறித்த அறிக்கை வெளியீடு
பதிவு : ஜனவரி 16, 2020, 02:28 AM
2018-19 ஆம் நிதியாண்டில் தேசிய கட்சிகளின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான தகவல்களை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பான ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ளது.
2018-19 ஆம் நிதியாண்டில் தேசிய  கட்சிகளின் வருவாய் மற்றும் செலவினங்கள் தொடர்பான தகவல்களை ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பான ஏ.டி.ஆர் வெளியிட்டுள்ளது. 

அதன் படி, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், திரிணமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 தேசிய கட்சிகள் 3 ஆயிரத்து 88 கோடி ரூபாயை, நன்கொடையாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இது கட்சிகளின் மொத்த வருவாயில் 83 சதவீதமாகும். தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம், பாஜக, காங்கிரஸ், திரிணமுல் ஆகிய கட்சிகள் ஆயிரத்து 931 கோடியே 43 லட்சம் ரூபாயை, நிதியாக பெற்றுள்ளன. 

இதே போல், பாஜகவுக்கு நன்கொடையாக 2 ஆயிரத்து 454 கோடியே 2 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது அக்கட்சியின் மொத்த வருமானத்தில் 97.67 சதவீதமாகும். இதே போல், காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடை மூலம்  551 கோடியே 55 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.  இது அக்கட்சியின் மொத்த வருமானத்தில் 60 புள்ளி 8 சதவிகிதம் ஆகும். 

பிற செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 3,915 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 views

"ஊரடங்கில் இரக்கத்துடன் செயல்படுங்கள்" - பிரதமருக்கு, ராகுல்காந்தி வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கு போது அரசாங்கம் இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

28 views

முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பது நீடித்தால் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

261 views

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல்

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

34 views

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் - 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைப்பு

சென்னையில் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, 15 மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிக்கும்படி மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

13 views

மருந்துகளுக்கான காப்புரிமை என்றால் என்ன? - இந்தியா கோரிக்கையும் அமெரிக்கா ஆதரவும்

கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய அமெரிக்கா ஆதரவளித்துள்ள நிலையில் இந்தியாவிற்கான பயன்கள் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.