ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்பவர் கூடுதல் செயல் அலுவலர் அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றார்.
ஐபிஎஸ் அதிகாரி என கூறி விஐபி தரிசன டிக்கெட் பெற்றவர் கைது - போலி அடையாள அட்டை வைத்திருந்ததும் கண்டுபிடிப்பு
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கானா மாநில ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அருண் குமார் என்பவர் கூடுதல் செயல் அலுவலர் அலுவலகத்தில் விஐபி தரிசன டிக்கெட் பெற்றார். அவரது அடையாள அட்டையில் சந்தேகமடைந்த தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் போலி அடையாள அட்டையை தயார் செய்து பயன்படுத்தி விஐபி தரிசன டிக்கெட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, 
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே அம்மாநில முன்னாள் அமைச்சர் முகேஷ்கவுடு உள்ளிட்ட பலரிடம்  சிறப்பு அதிகாரியாக பணிபுரிந்த போது இத்தைகய போலி அடையாள அட்டையை தயாரித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை போலிசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்