திருப்பதி : பக்தர்கள் அனைவருக்கும் ஒரு இலவச லட்டு - ஜன.6 முதல் அமலுக்கு வருகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி : பக்தர்கள் அனைவருக்கும் ஒரு இலவச லட்டு - ஜன.6 முதல் அமலுக்கு வருகிறது
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டும்  இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சலுகை விலையில் லட்டுகள் வழங்குவதால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . விரைவில் சலுகை விலையில் வழங்கப்படும் லட்டுகள் ரத்து என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்