புதுச்சேரி : வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்

புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி : வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்
x
புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்பட்டது. நட்சத்திர விடுதிகளில்  மது விருந்துடன் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்று மகிழ்ந்தனர். மேலும் கடற்கரையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பறிமாரிக்கொண்டனர். கடற்கரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதலமைச்சர் நாராயணசாமியும் தனித்தனியாக பார்வையிட்டு பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்